தகுதியின் அடிப்படையிலேயே பணியிடங்கள் நிரப்பப்படும்.. யாரையும் நம்பி ஏமாற வேண்டாம்: மின்சாரத்துறை அமைச்சர்

தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்கள் முற்றிலும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
 | 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி, " தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்கள் முற்றிலும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுவதாவும், தனிநபர்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்தார். அனைத்து துணைமின் நிலையங்களிலும், மின்சாரத்தை நிறுத்தாமல் மின்பழுது நீக்கும் தொழில்நுட்பம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும்,
உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, அதற்கான இழப்பீட்டு தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP