காஞ்சிபுரம் அருகே பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை 

காஞ்சிபுரம் அருகே குடும்ப பிரச்னையால் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

 காஞ்சிபுரம் அருகே பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை 

காஞ்சிபுரம் அருகே குடும்ப பிரச்னையால் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே வையாவூர் அண்ணா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கோமதி. இவர், சிபிசிஐடியில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 12 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், குடும்ப பிரச்னையால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 6 மாதத்துக்கு முன்பு தனது கணவரிடம் விவாகரத்து பெற்றார்.

இந்த நிலையில்,  கணவரை பிரிந்ததால் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படும் கோமதி, வீட்டில் உள்ள அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, தகவலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி விசாரணை மேற்கொண்டு வருகின்றார். காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவலர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP