வலிமையான தலைவராக மோடி இருப்பதால், உலக நாடுகள் நட்பு பாராட்டுகின்றன: முரளிதரன்

வலிமையான தலைவராக மோடி இருப்பதால்தான் உலக நாடுகள் இந்தியாவுடன் நட்பாக இருக்க விரும்புகின்றன என மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
 | 

சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய அவர், "பிரதமர் மோடியின் அரசு கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், அனைத்து மக்களுக்குமான அரசாக தற்போதைய மத்திய அரசு உள்ளது என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் சமூக நீதி பேசும் அரசியல் கட்சிகள், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கின்றன. ஹிந்தியை எதிர்க்கும் அரசியல் கட்சியினர் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தியை கற்பிக்கின்றனர். பிரிட்டிஷ் ஆங்கில மொழியை ஆதரித்து, இந்திய மொழியான ஹிந்தியை சிலர் எதிர்க்கின்றனர். இது ஆங்கிலேயே அடிமைத்தனத்தின் வெளிப்பாடே. வளைகுடா நாடுகளுக்கு இணையாக கேரள மக்கள் தமிழகத்தில் உள்ளனர். கேரளாவில் இருந்து வந்துள்ளதால் கேரளாவுக்கு மட்டும் செய்வேன் என்றில்லை. தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன். தமிழகத்தில் சமூக நீதி பேசும் அரசியல் கட்சிகள், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கின்றன. வலிமையான தலைவராக மோடி இருப்பதால்தான் உலக நாடுகள் நட்பாக இருக்க விரும்புகின்றன என தெரிவித்தார். 

Newstm.in 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP