தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்படுமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த வழக்கை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இன்று உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து தீர்ப்பு வழங்குகிறது. எனவே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா என்பது இன்று தெரியும்.
 | 

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து 2016-ம் ஆண்டு அக்டோபர் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ந் தேதி அறிவித்தது. இதைத் தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவும், இதே கோரிக்கையுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த உமாபதி உள்ளிட்ட 6 பேர் தாக்கல் செய்த மனுவும், வக்கீல் சி.எஸ்.ஜெயசுகின் என்பவர் தாக்கல் செய்த மனுவும் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர மற்ற கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொள்வதாக கூறிய நீதிபதிகள் இதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டின் இணையதளத்தில் நேற்று மாலை தகவல் வெளியிடப்பட்டது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP