காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி பலி!

சிறுவாணி அருகே காட்டு யானை தாக்கியதில் 65 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு கோவை மாவட்ட வனத்துறையின் சார்பில் ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்பட்டது.
 | 

காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி பலி!

கோவை மாவட்டம் சிறுவாணி அருகே காட்டு யானை தாக்கியதில் 65 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் காருண்யா நகரைச் சேர்ந்தவர் எஸ்.சின்னமணி (65). இவர், நேற்று இரவு மின்சாரம் தடைபட்டதால், காற்றிற்காக வீட்டின் வெளியே படுத்திருந்தார். அப்போது, அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அவரது வீட்டின் பக்கம் வந்த காட்டு யானை ஒன்று சின்னமணியை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு கோவை மாவட்ட வனத்துறையின் சார்பில் ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP