கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - தமிழிசை

எச்.ராஜாவை கைது செய்ய கூறியவர்கள் கருணாஸ் விஷயத்தில் என்ன சொல்லப்போகிறார்கள்? கருணாஸ் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 | 

கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - தமிழிசை

எச்.ராஜாவை கைது செய்ய கூறியவர்கள் கருணாஸ் விஷயத்தில் என்ன சொல்லப்போகிறார்கள்? கருணாஸ் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தமிழகத்தில் ஒருதலைபட்சமான அரசியல் தான் நிலவுகிறது. எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என கூறுபவர்கள் கருணாஸை கண்டிக்காதது ஏன்? காவல்துறைக்கு சவால் விடும் வகையில் பேசிய கருணாஸ் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது? 

தி.மு.கவுக்கு எதிராக அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பது சரியானது தான். இலங்கைப்போரில் இந்தியா உதவி செய்தது என ராஜபக்சே. கூறியிருக்கிறார். காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த தி.மு.க என்ன செய்தது? ஆனால் ஸ்டாலின் அடுத்த முதல்வராக வேண்டும் என ஆதரவளிக்கும் வைகோவோ, திருமாவளவனோ இதுகுறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. மற்ற கட்சிகள் ஏதேனும் தவறு செய்தால் கேட்கும் அவர்கள், தாங்கள் கட்சியில் தவறு நடந்தாலும் கேட்க வேண்டும். தமிழகத்தில் ஊழலுக்கு வித்திட்டதே தி.மு.க தான்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டியது தான். அது மிகப்பெரிய சப்ஜெக்ட். உள்நாட்டில் நிர்வாக ரீதியாக பிரச்னை இருக்கிறது. அதனை பொறுமையாக தான் சரிசெய்ய வேண்டும். பா.ஜ.க இந்தியாவில் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த தி.மு.க என்ன தொலைநோக்கு திட்டத்தை கொண்டு வந்தது?

மணல் கொள்ளையை தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இருசக்கர வாகன நிறுவனங்கள், வாகனத்துடன் ஹெல்மெட்டை இலவசமாக கொடுக்க வேண்டும்" என்றார். 

மேலும், பிரதமர் மோடி அடுத்த வாரம் தமிழகம் வரவிருப்பதாகவும் தமிழிசை தகவல் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP