மாணவி தற்கொலையில் யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்? கனிமொழி

மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்? என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
 | 

மாணவி தற்கொலையில் யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்? கனிமொழி

மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்? என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். 

மக்களவையில், மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக பேசிய கனிமொழி, " கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடியில் 52 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும்,  மாணவர்கள் தற்கொலை வெட்கப்பட வேண்டிய விஷயம் எனவும் கூறினார். மாணவி பாத்திமா தற்கொலையில் யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள் என கேள்வி எழுப்பிய அவர், பேராசிரியர் பெரை குறிப்பிட்ட பிறகும், நடவடிக்கையில் தாமதல் ஏன்? என்றும் இவ்விவகாரம் தொடர்பாக இதுவரை யார் மீதும் வழக்கு பதிவு செய்யாதற்கு காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், மாணவி பாத்திமாவின் அறையிலிருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கனிமொழி குறிப்பிட்டார். 

இதையடுத்து, பாத்திமா தற்கொலை தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறையின் மூத்த அதிகாரி விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு பதிலளித்தது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP