கல்லூரியில் ராகுல் பேச அனுமதி அளித்தது யார்: கல்லூரி கல்வி இயக்குநர் கேள்வி

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது கல்லூரியில் ராகுல் காந்தியின் நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என கல்லூரி கல்வி இயக்குநர் கேள்வி எழுப்பியதோடு இதுகுறித்து விசாரணை நடத்த மண்டல இணை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 | 

கல்லூரியில் ராகுல் பேச அனுமதி அளித்தது யார்: கல்லூரி கல்வி இயக்குநர் கேள்வி

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது கல்லூரியில் ராகுல் காந்தியின் நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என கல்லூரி கல்வி இயக்குநர் கேள்வி உள்ளார். 

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 13ம் தேதி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரிக்கு வந்திருந்தார். அங்கு மாணவிகளுடன் அவர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். 

இந்த நிகழ்ச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு அரசியல் கட்சித்தலைவர் எப்படி கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசலாம் என்று பலரும் கேள்வி எழுப்பினர். 

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது இந்த நிகழ்ச்சியை நடத்த யார் அனுமதி கொடுத்தது என்று கல்லூரி கல்வி இயக்குநர் சாருமதி கேள்வி எழுப்பி உள்ளார். 

மேலும் இதுகுறித்து அறிக்கை சமர்பிக்குமாறு மண்டல இணை இயக்குநருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். எனவே இதுகுறித்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP