எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை?

தொடர் கனமழை காரணமாக நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தேனி, கொடைக்கானல், திருவாரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் பள்ளிகள், மதுரை மேலூரில் உள்ள ஒரு சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை?

தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், நாளை மிக கனமழை எச்சரிக்கையான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் வெள்ளதடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழை காரணமாக நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும்  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

புதுச்சேரி மாவட்டத்திற்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள் எதுவும் செயல்படாது. அதேபோன்று நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தேனி, கொடைக்கானல், திருவாரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் பள்ளிகள், மதுரை மேலூரில் உள்ள ஒரு சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்ட  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP