கருணாநிதியின் இறுதிச்சடங்கில் முதல்வர் எங்கே?- ரஜினிகாந்த்

கருணாநிதியின் இறுதிச்சடங்கில், முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்காதது ஏன்? என ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
 | 

கருணாநிதியின் இறுதிச்சடங்கில் முதல்வர் எங்கே?- ரஜினிகாந்த்

கருணாநிதியின் இறுதிச்சடங்கில், முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்காதது ஏன்? என ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதிக்கு காமராஜர் அரங்கத்தில் திரையுலகினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியபின் பேசிய ரஜினிகாந்த், “அதிமுக உருவானதே கருணாநிதியால்தான். அவரால் தலைவர்கள் ஆனவர்கள் பல நூறு பேர். ஒரே படத்தில் சிவாஜியை சூப்பர் ஸ்டாராக மாற்றியவர் கருணாநிதி. சூழ்ச்சிகள், துரோகங்கள் என அனைத்தையும் கடந்து 50 ஆண்டுகள் கட்சியை வழிநடத்தினார். கருணாநிதி பாமரர்கள் முதல் பண்டிதர்கள் வரை அனைவரையும் எழுத்தால் ஈர்த்தவர்.

இருட்டில் இருந்த இதிகாச வீரர்களை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்த்தவர். கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த அலை அலையாக கூடிய கூட்டத்தை பார்த்து கண்ணீர் சிந்தினேன். கருணாநிதியின் இறுதிச்சடங்கில், முதல்வர் அமைச்சர்கள் பங்கேற்காதது ஏன்?  இறுதி மரியாதை செய்ய தமிழக முதல்வர் வராதது வருத்தமளிக்கிறது. மெரினாவில் கருணாநிதிக்கு இடம் தராமல் அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன். கலைஞர் இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆண்டு விழாவில் எம்ஜிஆர் படத்திற்கு அருகில் கலைஞர் படத்தை வைக்க வேண்டும்” என உருக்கமாக பேசினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP