வாட்ஸ்ஆப் ப்ளாக், அன்ப்ளாக் பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை!

வாட்ஸ்ஆப்- இல் ஒரு நபரிடமிருந்து மெசேஜ் அல்லது கால் வருவதில் விருப்பம் இல்லை என்றால் அவர்களை ப்ளாக் செய்யலாம். ப்ளாக் செய்வதன் மூலம் அவர்களால் நமக்கு மெசேஜ் , கால் செய்ய முடியாது.
 | 

வாட்ஸ்ஆப் ப்ளாக், அன்ப்ளாக் பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை!

வாட்ஸ்ஆப்-இல் யாருக்காவது மெசேஜ்  அனுப்பி பதில் வரவில்லையா ? உங்களை அந்த குறிப்பிட்ட நபர் ப்ளாக் செய்துள்ளார் என்பது அர்த்தம். அது என்ன ப்ளாக் அம்சம் ? வாட்ஸ்ஆப்- இல் ஒரு நபரிடமிருந்து மெசேஜ் அல்லது கால் வருவதில் விருப்பம் இல்லை என்றால் அவர்களை ப்ளாக் செய்யலாம். ப்ளாக் செய்வதன் மூலம் அவர்களால் நமக்கு மெசேஜ், கால் செய்ய முடியாது.

இதே போல ஒருவர் நம்மை ப்ளாக் செய்தால் கண்டுபிடிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம். அந்த நபரின் வாட்ஸ்ஆப் புகைப்படம் நமக்கு காண்பிக்காது. மேலும், அவர்களின் ஸ்டேடஸ் மற்றும் ஆன்லைனில் இருக்கும் நேரம் கூட நமக்கு தெரியாது. அவர்களுக்கு நாம் அனுப்பும் மெசேஜ் கூட சிங்கில் டிக் மட்டுமே போகும். அந்த நபர் நம்மை அன்ப்ளாக் செய்த பிறகு நீங்கள் அந்த நபருக்கு ப்ளாக் செய்த நேரத்தில் அனுப்பியுள்ள மெசேஜ் காண்பிக்கப்படாது. 

ஒரே சமயத்தில் எத்தனை பேரை வேண்டுமானாலும் ப்ளாக் செய்யலாம். பிறகு அன்ப்லாக்கும் செய்யலாம். வாட்ஸ்ஆப் ப்ளாக் செய்வது எப்படி? அந்த குறிப்பிட்ட நபரின் மெசேஜ் பக்கத்தில் பார்த்தல் உங்கள் வலது பக்கம் மேல் மூன்று புள்ளிகள் அம்சம் தோன்றும். அதை கிளிக் செய்து மோர் ஆப்ஷன் கிளிக் செய்யவேண்டும். அதில் ப்ளாக் என்ற ஒரு ஆப்ஷன் தோன்றும். அதை கிளிக் செய்வதன் மூலம் அந்த நபர் நமக்கு மெசேஜ் அல்லது கால் செய்வதை தடுக்க முடியும். மேலும் தெரியாத நபரிடம் இருந்து மெசேஜ் வந்தாலோ இதே முறையில் அவர்களையும் ப்ளாக் செய்யலாம்.

நாம் ப்ளாக் செய்த நபர்களை எப்படி தெரிந்து கொள்ளலாம் ? வாட்ஸ்ஆப் பக்கத்தில் உங்கள் வலது பக்கத்தில் மேல் இருக்கும் மூன்று புள்ளியை கிளிக் செய்யவேண்டும். அதற்குள் செட்டிங்க்ஸ் ஆப்ஷன் கிளிக் செய்தால் சாவி சின்னத்தோடு அக்கௌன்ட் என்ற அம்சம் இருக்கும். அதை கிளிக் செய்யவேண்டும். ப்ரைவசி என்ற ஆப்ஷன் கிளிக் செய்து யாரையெல்லாம் நாம் ப்ளாக் செய்துள்ளோம் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

ஒருவரை அன்ப்ளாக் செய்வதும் சுலபம் தான். இதே ப்ளாக் லிஸ்ட் க்ளிக் செய்தால் அன்ப்ளாக் என்றொரு ஆப்ஷன் தோன்றும். இதனை க்ளிக் செய்வதன் மூலம் அந்த நபரை நாம் அன்ப்ளாக் செய்யலாம். அன்ப்ளாக் செய்துவிட்டால் சகஜமான மெசேஜ், கால்ஸ் அந்த நபரிடம் இருந்து  வர துவங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP