ஊடகங்களே உங்களுக்கு என்ன வேண்டும்?

பேசுகிறவர்கள் நேற்று தான் இந்த நாட்டில் பிறந்தவர்கள் போல பேசுகிறார்கள். உண்மையில் விவாதம் சம்பந்தப்பட்ட பிரச்னையில் நிபுணத்துவம் கொண்ட வர்களை கொண்டு ஆலோசனை செய்யலாம். அதை விடுத்து வாயால் வாயால் வடை சுடும் வல்லுனர்கள் தான் தங்கள் வாய்க்கு வந்த படி பேசுகிறார்கள்.
 | 

ஊடகங்களே உங்களுக்கு என்ன வேண்டும்?

தனியார் தொலைக்காட்சிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கமல் வாரம், ரஜினி வாரம், காதல் வாரம் என்று வாரம் கொண்டாட்டம் நடக்கும். விவாத நிகழ்ச்சி அறிமுகமான பிறகு  பேச்சுவியாபாரிகளைக் கொண்டு பட்டிமன்றத்திற்கு பதிலாக, நாளும் ஒரு விவாதம் தொடர்கிறது. கடந்த மாதம் சுபஸ்ரீ மாதம், இந்த மாதம் சுர்ஜித் மாதம் என்பது போல ஊடகங்கள் தங்கள் கடமையை தொடங்கி விட்டன. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. இவர் மனைவி கலாமேரி. இவர்கள் 2வது மகன் சுர்ஜித் வில்சன்(2). கடந்த 26ம் தேதி சுஜித் வில்சன் அவரின் தந்தை, 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்து கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். 

தொடக்கத்தில் சுமார் 30 ஆழத்தில் சிக்கி கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்குசென்று மீட்பு பணியை தொடங்கினர். ஆனால் சிக்கல் அதிகரிக்க வே இது போன்ற சம்பவங்களில மீட்பு பணியில் ஈடுபடும் மதுரை மணிகண்டன் என்பவர், தான்  கண்டுபிடித்த கருவிகளுடன் வந்து மீட்பு பணியை தொடங்கினார். 

பின்னர் அணி அணியாக வந்து தங்கள் பங்குக்கு முயற்சி செய்கிறார்கள். 3 அமைச்சர்கள் அதே இடத்தில் தங்கி இருந்து மீட்பு பணிகளைமேற்பார்வையிடுகிறார்கள். டாக்டர்கள், கோரிக்கையை வலியுறுத்தி நடத்திய வேலை நிறுத்தத்தையும் மீறி தயார் நிலையில் உள்ளனர்.

அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தகவல் அறிந்தது முதல் அங்கேயே தங்கியிருந்தனர். முன்னாள் அமைச்சர் நேருவும் அங்கு சென்று மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி வந்தார். இவ்வாறு முழுமையாக நடைபெறுகிறது.

ஊடகங்கள் சம்பவம் நடந்த சில மணி நேரங்கள் அதனை நேரலையாக எவ்விதமான விமர்சனம் இல்லாமல் ஒளிபரப்பின. அதன் பின்னர் விவாதம் என்ற பெயரில் விமர்சனங்கள் மட்டுமே எதிரொலித்தன. நவீன தொழில்நுட்பம் ஏன் வளரவில்லை என்று ஒரு தொலைக்காட்சி கேள்வி எழுப்புகிறது. 

பேசுகிறவர்கள் நேற்று தான் இந்த நாட்டில் பிறந்தவர்கள் போல  பேசுகிறார்கள். உண்மையில் விவாதம் சம்பந்தப்பட்ட பிரச்னையில் நிபுணத்துவம் கொண்ட வர்களை கொண்டு ஆலோசனை செய்யலாம். அதை விடுத்து வாயால்  வாயால் வடை சுடும் வல்லுனர்கள் தான் தங்கள் வாய்க்கு வந்த படி பேசுகிறார்கள்.

இப்படி பேசுகிறவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டிய ஆவலாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட ஊடகங்களும் எந்தளவுக்கு தங்கள் ஊழியர்களை நடத்துகிறது என்று பார்த்தால் வேதனைதான் மிச்சம்.

இந்த பிரச்சனை மட்டும் அல்லாமல், அனைத்து விதமான விவகாரங்களுக்கும் மக்களை விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய ஊடகங்கள், அதற்கு பதிலாக அரசை குறை கூறுவதாகத்தான் இருக்கிறது.

இப்படி பட்ட விவாதங்கள் தான் மக்களை பொறுப்பற்றவர்களாக உருவாக்குகிறது. இன்றைக்கு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த உடன் திறந்து இருக்கும் ஆழ்துளைக்கிணற்றை பற்றி விவாதிக்கிறோம். ஆனால் சாலையில் சிதைந்த நிலையில் உள்ள பாதாளசாக்கடை மூடிகளை பற்றி கவலைப் படுவதில்லை. 
வீட்டில் உள்ள தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என்று அரசும் சரி, மற்வர்களும் சரி கூச்சல் இடுகிறார்கள். ஆனால் சாலையில் இருக்கும் பள்ளத்தை பற்றி கவலைப்படுவது கிடையாது. ஒரு வாரம் தண்ணீர் வரவில்லை என்று போராட்டம் நடத்துபவன் தான், வழக்கத்திற்கு மேல் கூடுதலாக தண்ணீர் வந்தால் காவிரி நீரைக் கொண்டு மரத்திற்கு விடுகிறான். வீட்டு வாசலில் தெளிக்கிறார்.

தெருக்குழாயை திறந்து விட்டு மறைவாக நின்று கொண்டால், சாலையில் நடந்து செல்பவர்களில் எத்தனை பேர் அதனை மூடி விட்டு செல்கிறார்கள் என்று தெரியும்.

கடந்த சில நாட்களாக அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி லட்ச லட்சமாக தீபாவளி இனாம் தொகையை பிடித்துள்ளனர். இது தவறு என்று எத்தனை ஊடகங்கள் அறிவுரை கூறும். அப்படி கூறினால் சம்பந்தப்பட்ட நிருவனங்களி்ல பணி புரிகிறவர்களுக்கு அவர்கள் எவ்வளவு கொடுத்தார்கள் என்று பட்டியல்  வெளியிடுவார்கள்.

பொதுவாக எந்த விவகாரமானாலும், அதில் பொதுமக்கள் எங்கே தவறு செய்தார்கள் என்று பார்த்து அதை திருத்தும் முயற்சியில் ஊடகங்கள் ஈடுபட வேண்டும். அதை விட்டு விட்டு அரசு மீது வெறுப்பை ஏற்படுத்தினால், ஆட்சியாளர்கள் எந்த வியூகத்தை வேண்டுமானாலும் பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவார்கள்.

அந்த சூழ்நிலையில் ஆட்சிக்கு வந்த கட்சியை எதிர்த்த ஊடகம் மக்கள் நம்பிக்கையை இழக்கும். அது அந்த ஊடகத்திற்கு நல்லது அல்ல.  இதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி போன்வர்கள் ஊடகங்களின் எதிர்ப்பையும் மீறி வெற்றி பெற்றதால் தான் எப்போதும் அவற்றை மதிப்பதே இல்லை. இது போன்றவர்கள் எண்ணிக்கை பெருகும் போது அரசு இருக்கும், மக்கள் இருப்பார்கள், ஆனால் ஊடங்கள் கதிதான் போயே  போச்சு என்றாகிவிடும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP