Logo

மக்களுக்கு இன்ப அதிர்ச்சி! பஸ் கட்டணத்தைக் குறைக்க அரசு முடிவு

தனியார் பேருந்துகளை போன்று, வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் அல்லது விழாக்காலங்களில் தொலை தூரம் செல்லும் அரசுப்பேருந்துகளின் கட்டணங்களை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அதிக அளவில் மக்கள் அரசு பஸ்களை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 | 

மக்களுக்கு இன்ப அதிர்ச்சி! பஸ் கட்டணத்தைக் குறைக்க அரசு முடிவு

ஆம்னி பஸ்களைப் போன்று, வார நாட்களில் நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளின் கட்டணங்களை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வேலைக்காக இடம்பெயர்ந்து வசித்து வருகின்றனர். அவர்கள் வார இறுதி நாட்களில் மற்றும் விழாக்காலங்களில் சொந்த ஊருக்குச் செல்கின்றனர். விழாக்காலங்களில் எவ்வளவு பேருந்துகள் விட்டாலும் பற்றாக்குறை என்ற அளவிலே கூட்டம் அலைமோதும். தனியார் பேருந்துகளில் வார நாட்கள், வார இறுதி நாட்கள், விழா நாட்கள் என ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் விழாக்காலங்களில் பெரும்பாலான மக்கள் அரசுப்பேருந்துகளை நம்பியே ஊருக்கு செல்வதுண்டு.  

ஆனால் கடந்த ஜனவரி மாதம் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தினால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். அரசுப்பேருந்துகளுக்கும், தனியார் பேருந்துகளுக்கு அவ்வளவு ஒன்றும் வித்தியாசம் இல்லை என்ற நிலையே ஏற்பட்டது. 

மக்களுக்கு இன்ப அதிர்ச்சி! பஸ் கட்டணத்தைக் குறைக்க அரசு முடிவு

இதன் காரணமாக, தனியார் பேருந்துகளை போன்றே அரசுப்பேருந்துகளிலும் வார நாட்களில் பேருந்து கட்டணத்தை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த காலங்களில் வழக்கமான கட்டணங்களைவிட 10% முதல் 15%  குறைய வாய்ப்புள்ளது. 

இது தொடர்பாக எஸ்.இ.டி.சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழக அரசுப்பேருந்துகளில் மற்ற தனியார் பேருந்துகளை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என ஒரு சூழல் நிலவுகிறது. இதனால மக்கள் தனியார் பேருந்துகளுக்கும், ரயில்களுக்கும் படையெடுக்கின்றனர்.இதனை தடுத்து பழையபடி அதிகப்படியான மக்கள் அரசு பேருத்துகளில் பயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வார நாட்களில் பேருந்து கட்டணத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொழில் ரீதியாக பயணிக்கும் மக்கள் பயன்பெறுவர். இதனால், வார நாட்களை விட வார இறுதி நாட்கள் விழா நாட்களில்  10% முதல் 15% அதிகமாக இருக்கும். இதை விலை ஏற்றம் என்று கருதக் கூடாது. தற்போது இருக்கும் கட்டணத்தில் மற்ற நாட்களக்கு சலுகை வழங்கப்படுகிறது என்றுதான் கருத வேண்டும். இதற்கு அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் நடைமுறைக்கு வரும்" என தெரிவித்தார்.

இதைப் படிச்சீங்களா? 

கருணாநிதிக்கு சிகிச்சை... சிக்கிய தனுஷ்... தப்பிய விஜய்சேதுபதி!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP