களைக்கட்டும் புஷ்கர விழா- தாமிரபரணி ஆற்றில் 5004 விளக்கு பூஜை

தாமிரபரணி ஆற்றில் களைக்கட்டும் புஷ்கர விழா கொண்டாட்டத்தின் கடைசி நாளான வரும் 24 ஆம் தேதி 5004 விளக்கு பூஜைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் விளக்கு ஏற்றி ஆராதனை செய்யும் தீபலட்சுமி பூஜை ஒவ்வொருநாளும் நடைபெற்று வருகிறது.
 | 

களைக்கட்டும் புஷ்கர விழா- தாமிரபரணி ஆற்றில் 5004 விளக்கு பூஜை

தாமிரபரணி ஆற்றில் களைக்கட்டும் புஷ்கர விழா கொண்டாட்டத்தின் கடைசி நாளான வரும் 24 ஆம் தேதி 5004 விளக்கு பூஜைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா நடத்தப்படுவது வழக்கம். அங்கவகையில் இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து, விருச்சிக ராசிக்குரிய தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

144 ஆண்டுகளுக்கு பிறகு மஹாபுஷ்கர விழா கடந்த 11 ஆம் தேதி தாமிரபரணி ஆற்றில் தொடங்கி விமரசியாக கொண்டாடப்பட்டு வருகிறது. புஷ்கர விழாவையொட்டி, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், சிறப்பு யாகங்கள் நடைபெற்று வருகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்ட இந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டு தாமிரபரணி ஆற்றில் நீராடி வருகின்றனர்.

இந்நிலையில் தாமிரபரணி படித்துறையில் மக்கள் விளக்கு ஏற்றி ஆராதனை செய்யும் தீபலட்சுமி பூஜை ஒவ்வொருநாளும் நடைபெற்று வருகிறது. விழாவின் கடைசி நாளான வரும் 24 ஆம் தேதி 5,004 திருவிளக்கு பூஜை நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP