மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருமண நிகழ்ச்சிகள் ரத்து!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசம் செய்ய வந்த பெண் ஒருவர் மரணமடைந்ததையடுத்து, கோவிலில் நடைபெற இருந்த திருமணங்கள் நிறுத்தப்பட்டன.
 | 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருமண நிகழ்ச்சிகள் ரத்து!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் மரணமடைந்ததையடுத்து, கோவிலில் இன்று நடைபெற இருந்த திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. 

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், இன்று காலை சுவாமி தரிசனம் செய்ய வந்த மகேஸ்வரி என்பவர் கோவிலில் உயிரிழந்தார். இதனால், கோவிலில் இன்று நடைபெறவிருந்த 2 திருமணங்கள் கோவில் நிர்வாகத்தால் நிறுத்தப்பட்டது. கோவிலில் சிறப்பு பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பிறகு திருமணங்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 

தகவலறிந்து வந்த போலீசார், கோவிலில் உயிரிழந்த மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP