தண்ணீருக்காக ரூ.1000 கோடி கேட்டுள்ளோம்: ஓபிஎஸ்

நிதியமைச்சர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ள ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் நிதியுதவி கேட்டுள்ளோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 | 

டெல்லியில் இன்று நடைபெற்ற மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றபின்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ‘நிதியமைச்சர்கள் கூட்டத்தில் தமிழக அரசின் கோரிக்கைகள், தேவைகள் ஆகியவற்றை முன்வைத்தோம். தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ள ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளோம்.

காவிரி - கோதாவரி நதிகள் இணைப்புக்கான நிதியை இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். விவசாய தொழிலாளர்களையும் ரூ.6,000 உதவித்தொகை திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியுள்ளோம். 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளோம்’ துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும், பருவமழை சரியாக பெய்யாததால் தமிழகத்தில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், தண்ணீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP