Logo

சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாளை முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது!

தண்ணீர் லாரிகளை போலீசார் நிறுத்தி வைப்பதை கண்டித்து, நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
 | 

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், பெரும்பாலான மக்கள் தண்ணீருக்காக தனியார் தண்ணீர் லாரிகளை தான் நம்பியுள்ளனர். இதனால், கடந்த இரு மாதங்களாக பெருநகரங்களில் ஆங்காங்கே தண்ணீர் லாரிகள் செல்வதை கண்கூடாக காணமுடிகிறது. 

இந்த நிலையில் தனியார் நிறுவன தண்ணீர் லாரிகளை போலீசார் வேண்டும் என்றே நிறுத்தி வைப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் போராட்டத்தில் குதித்துள்ளது. 

தண்ணீர் லாரிகளை போலீசார் நிறுத்தி வைப்பதை கண்டித்து, நாளை முதல் போராட்டம் நடைபெறவுள்ளது. இதனால், நாளை முதல் தண்ணீர் லாரிகள் இயங்காது. மக்கள் பெரும் பிரச்னைக்கு ஆளாகவுள்ள சூழ்நிலையில், தமிழக அரசு உடனே தலையிட்டு இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP