தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மக்களின் நலன் கருதி தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று சுமார் 4,000 தண்ணீர் லாரிகள் இயங்கவில்லை
 | 

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மக்களின் நலன் கருதி தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

நிலத்தடி நீரை எடுக்ககூடாது என்ற நீதிமன்ற உத்தரவை நீக்கக் கோரி தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.முக்கியமாக  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வாட்டர் கேன் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. 

சுமார் 4,000 தண்ணீர் லாரிகள் இயங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவர். 

இது தொடர்பாக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 'மக்களின் நலன் கருதி தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும். தண்ணீர் லாரி பிரச்னை என்பது இந்த 3 மாவட்டங்களில் மட்டுமல்ல, அனைத்து மாவட்டத்திலும் உள்ளது. இந்த பிரச்னை பேசி தீர்க்கப்படும் வரை லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்' என்றார். 

மேலும் குடிநீர் வாரியம் மூலமாக மக்களுக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP