முன்பதிவு செய்த இரு நாட்களில் தண்ணீர் விநியோகம்; 'டையல் பார் வாட்டர் 2.0' அறிமுகம்!

சென்னையில் முன்பதிவு செய்யப்பட்ட இரு நாட்களில் டேங்கர் லாரி தண்ணீரை பெறும் வசதி "டயல் பார் வாட்டர் 2.0" என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 | 

முன்பதிவு செய்த இரு நாட்களில் தண்ணீர் விநியோகம்; 'டையல் பார் வாட்டர் 2.0' அறிமுகம்!

சென்னையில் முன்பதிவு செய்யப்பட்ட இரு நாட்களில் டேங்கர் லாரி தண்ணீரை பெறும் வசதி "டயல் பார் வாட்டர் 2.0" என்ற பெயரில் சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் அறிமுகம் செய்துள்ளது.  

சென்னையில் கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களில் இருந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் டேங்கர் லாரிகள் மூலமாக மக்கள் தண்ணீர் பெறுவது அதிகரித்து வருகிறது. முன்னதாக, தமிழக அரசு "டயல் பார் வாட்டர்" என்று வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. இதன்மூலம் 044 4567 4567 என்ற தொலைபேசி வாயிலாக முன்பதிவு செய்தால் டேங்கர் லாரிகள் மூலமாக தண்ணீர் விநியோகம் செய்யப்படும். 

இந்த சேவையில், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விரைந்து தண்ணீர் செல்வதாகவும், சாதாரண மக்கள் வசிக்கும் பகுதிகளில், குறைவாக தண்ணீர் தேவைப்படும் பகுதிகளில், ஒரு சில நாட்கள் கழித்தே தண்ணீர் விநியோகிக்கப்படுவதாகவும் ஒரு பொதுவான குற்றச்சாட்டு நிலவி வந்தது. 

இதற்கு தீர்வு காணும் பொருட்டு  "டயல் பார் வாட்டர்" என்ற முறை திருத்தப்பட்டு  "டயல் பார் வாட்டர் 2.0" என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வருகிற 29ம் தேதி(திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. 

முன்பதிவு செய்த இரு நாட்களில் தண்ணீர் விநியோகம்; 'டையல் பார் வாட்டர் 2.0' அறிமுகம்!

இதன்மூலம் 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீரை தொலைபேசி வாயிலாக(044 4567 4567) முன்பதிவு செய்யலாம். தண்ணீர் விநியோகித்த பிறகு 'கேஷ் ஆன் டெலிவரி' முறையில் கட்டணம் செலுத்தினால் போதுமானது. மேலும் விருப்பப்பட்டவர்கள் ஆன்லைன்  மூலமாகவும் செலுத்தலாம். 

3000 லிட்டருக்கு மேல் தண்ணீர் தேவையுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக எவ்வளவு தண்ணீர் தேவையோ அதற்கேற்ப முன்பதிவு செய்துகொள்ளலாம். இதன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட இரு தினங்களுக்குள் தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.

எந்த தேதியில் டேங்கர் லாரிகள் வரும் எனவும் நீங்கள் இணையதளம் வாயிலாக முன்கூட்டியே தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட வரிசையிலேயே தண்ணீர் விநியோகம் செய்யப்படும். chennaimetrowater.tn.gov.in இணையதளத்தில் இதுகுறித்த விரிவான விபரங்களை அறிந்துகொள்ளலாம்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP