முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு 

தேனி மாவட்டம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
 | 

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு 

தேனி மாவட்டம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் இருந்து 18ஆம் கால்வாய் வழியாக இன்று முதல் 30 நாட்களுக்கு வினாடிக்கு 98 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். நீர் திறப்பின் மூலம் தேனி மாவட்டத்தின் 4614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் முல்லைப்பெரியாறு கால்வாய்களில் இருந்து நீரை திறந்து வைத்தார்.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் குப்பநத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீ திறக்கப்பட்டது. முதல் மடை பாசனத்திற்காக அணையில் இருந்து 47 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நீரை திறந்து வைத்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP