மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 67 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து 60,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
 | 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 67 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து  60,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் பெய்த தொடர் மழை காரணமாக அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை முதல் 67000 கன அடியாக குறைந்துள்ளது. 

தற்போது அணையின் நீர்மட்டம் 120.940 அடியாகவும், நீர் இருப்பு 94.974 டி.எம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து 60,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 65,000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP