17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர்  இடிப்பு!

மேட்டுப்பாளையத்தில் 20 அடி உயரமுள்ள அந்த சர்ச்சைக்குரிய சுவரின் எஞ்சிய பகுதிகளை, நகராட்சி மற்றும் வருவாய் அதிகாரிகள் இணைந்து இடித்தனர்.
 | 

17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர்  இடிப்பு!

ஏரி காலனியில், சி‌வ சுப்பிரமணியம் என்பவர் எழுப்பிய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, விதிமுறைகளை மீறி அதிக உயரமுள்ள சுவர் எழுப்பிய குற்றத்திற்காக வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். இதனிடையே, ‌20 அடி உயரமுள்ள அந்த சர்ச்சைக்குரிய சுவரின் எஞ்சிய பகுதிகளை, நகராட்சி மற்றும் வருவாய் அதிகாரிகள் இணைந்து இடித்தனர். சர்ச்சைக்குரிய சுவற்றுக்கு அருகிலுள்ள மற்ற உயரமான சுவர்களும் இடிக்கப்பட்ட‌ன. மற்ற சுவர்களை இடிக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், அவை இடிக்கப்பட்டன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP