பொறுத்திருந்து பாருங்கள்: மு.க.ஸ்டாலின்

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்குமாறு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

பொறுத்திருந்து பாருங்கள்: மு.க.ஸ்டாலின்

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்குமாறு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எதிர்கட்சியாக உங்கள் செயல்பாடு இனி எப்படி இருக்கும்? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, சட்டப்பேரவை கூடும் போது எங்களது செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை நீங்கள் பார்க்க போகீறீர்கள், தொலைகாட்சியில் ஒளிபரப்ப போகிறீர்கள் என கூறினார். 

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளதா? அதில் திமுக உறுதியாக இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, wait and see, பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்தார். 

மேலும், ஆட்சிக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு சட்டமன்றம் கூடும் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தேதி அறிவித்ததும் அதுகுறித்து முடிவெடுப்போம் என தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP