புதுச்சேரி சபாநாயகராக பொறுப்பேற்றார் வி.பி.சிவக்கொழுந்து!

புதுச்சேரி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவக்கொழுந்து, இன்று சட்டப்பேரவை கூடியதையடுத்து அவர் சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
 | 

புதுச்சேரி சபாநாயகராக பொறுப்பேற்றார் வி.பி.சிவக்கொழுந்து!

புதுச்சேரி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.பி.சிவக்கொழுந்து, இன்று சட்டப்பேரவை கூடியதையடுத்து அவர் சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில், சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து, புதுச்சேரிக்கு புதிய சபாநாயகரை தேர்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தால், சட்டப்பேரவை கூடும் நாளில், குரல் வாக்கெடுப்பு  நடக்கும் என்று புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நேற்று பிற்பகல் 12 மணியுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்தது. புதுச்சேரி சபாநாயகர் பதவிக்கு வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாத நிலையில், துணை சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்து, புதுச்சேரி சபாநாயகராக ஒருமனதாக  தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவக்கொழுந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றும் லாஸ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதைத்தொடர்ந்து இன்று புதுச்சேரி  சட்டப்பேரவை கூடியதையடுத்து, சபாநாயகராக வி.பி.சிவக்கொழுந்து பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP