புதுச்சேரி சபாநாயகராக வி.பி.சிவக்கொழுந்து தேர்வானார்!

புதுச்சேரி சபாநாயகர் பதவிக்கு வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாத நிலையில், முன்னாள் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, புதுச்சேரி சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 | 

புதுச்சேரி சட்டப்பேரவையில், சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, அவர் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவை நாளை கூடவுள்ள நிலையில், சபாநாயகர் பதவிக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தால், குரல் வாக்கெடுப்பு அன்றைய தினமே நடக்கும் என்று புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் தெரிவித்திருந்தார்.

ஆனால், இன்று பிற்பகல் 12 மணியுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்தது. தொடர்ந்து, வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாத நிலையில், முன்னாள் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, புதுச்சேரி சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிவக்கொழுந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றும் லாஸ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ என்பதும் குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP