வாக்காளர் பட்டியல்: நவம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, நீக்க நவம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 | 

வாக்காளர் பட்டியல்: நவம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, நீக்க நவம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்த பின்னரே உள்ளாட்சி அமைப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இயலும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் பெயர் இடம்பெற்றால்தான் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க இயலும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கல் ஆகியவை www.nvsp.in இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் குறித்த விவரங்கள் www.tnsec.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆணையம் கூறியுள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP