தமிழகத்தில் முதல்முறையாக மனநல காப்பகத்தில் உள்ளோருக்கு வாக்காளர் அடையாள அட்டை!

தமிழகத்திலேயே முதல்முறையாக சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ளோருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்க திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
 | 

தமிழகத்தில் முதல்முறையாக மனநல காப்பகத்தில் உள்ளோருக்கு வாக்காளர் அடையாள அட்டை!

தமிழகத்திலே முதல்முறையாக சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ளோருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்க திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் 900-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறு வயதிலே மனநலம் குன்றியவர்கள், குற்றச்செயல் புரிந்ததினால் மனநலம் பாதிக்கப்பட்டோர் இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனர். உறவினர்கள் யாரும் இல்லை என்ற நிலைமையில், மற்றவர்கள் மனநல காப்பகத்தில் தொழிற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், பூரண குணமடைந்த நபர்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளில் ஒன்றான வாக்குரிமையை பெற்றுத்தர தன்னார்வ நிறுவனம் முன்வந்துள்ளது. மனநல காப்பகத்துடன் இணைந்து பூரண குணடமடைந்த நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை பெற்றுத்தரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முதல்முறையாக மனநல காப்பகத்தில் உள்ளோருக்கு வாக்காளர் அடையாள அட்டை!

முதலில், குணமடைந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு சுயமாக முடிவெடுக்கும் திறன் இருக்கிறதா என்பது சோதனை செய்யப்பட்டு பட்டியல் இறுதி செய்யப்படும். பின்னர் இவர்களுக்கு அரசின் உதவியுடன் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுத்தரப்படும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, மேற்குவங்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் உள்ளோருக்கு வாக்காளர் அடையாள அட்டை முதல் முறையாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் வழங்கப்பட இருக்கிறது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP