வோடபோன், ஐடியா இழுத்து மூடப்படும் அபாயம்! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

அலைக்கற்றை பயன்பாட்டிற்கான கட்டணம் உரிமை தொகை, என வோடபோன் ஐடியா நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ.53 ஆயிரம் கோடியை உடனே செலுத்த உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
 | 

வோடபோன், ஐடியா இழுத்து மூடப்படும் அபாயம்! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

அலைக்கற்றை பயன்பாட்டிற்கான கட்டணம் உரிமை தொகை, என வோடபோன் ஐடியா நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ.53 ஆயிரம் கோடியை உடனே செலுத்த உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் வோடபோன் ஐடியா நிறுவனத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று அதன் தலைவர் குமாரமங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார். ஆனால் 4-வது காலாண்டில் மட்டும் சுமார் ரூ.51 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசு உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

மத்திய அரசு உதவி செய்யாவிட்டால் நிறுவனத்தை இழுத்து மூடுவதை தவிர வேறுவழியில்லை என்று வோடபோன் ஐடியா தலைவர் குமாரமங்கலம் பிர்லா கூறியுள்ளார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அடித்தளமாக விளங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை காப்பாற்ற அரசு முன்வர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருளாதார சரிவை மீட்டெடுக்க  நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்யும் எந்த திட்டமும்  இல்லை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாராளுமன்றத்தில்  கருத்து தெரிவித்துள்ளார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP