வோடபோன் ஐடியா வாடிக்கையார்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி..!

நாடு முழுவதும் தற்போது ஜியோ என்ற தொலை தொடர்பு நிறுவனமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால், ஏர்டெல், ஐடியா, வோடாபோன், டாட்டா டொகோமோ உள்ளிட்ட தொலை தொடர் நிறுவனங்களில் சில இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது
 | 

வோடபோன் ஐடியா வாடிக்கையார்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி..!

நாடு முழுவதும் தற்போது ஜியோ என்ற தொலை தொடர்பு நிறுவனமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால், ஏர்டெல், ஐடியா, வோடாபோன், டாட்டா டொகோமோ உள்ளிட்ட தொலை தொடர் நிறுவனங்களில் சில இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இன்னும் சில நிறுவனங்கள் வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தில் நிறுவனத்தை நடத்தி வருகிறது. 

இதனிடையே தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சரிசெய்யப்பட்ட வருவாய் தொடர்பான வழக்கில், வோடாபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் பாக்கி தொகையை தொலை தொடர்பு துறையிடம் செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏதாவது நிவாரணம் அளிக்க வேண்டும் இல்லையென்றால் தங்களால் தொழிலை நடத்த முடியாது என தொலை தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.  

வோடபோன் ஐடியா வாடிக்கையார்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி..!
 
இந்நிலையில், வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பாக்கி தொகையை செலுத்துவதில் மத்திய அரசு எவ்வித நிவாரணமும் அளிக்கவில்லை என்றால் வோடாபோன் ஐடியா நிறுவனம் மூடப்படும் என்றும் மோசமான நிலையை எட்டியபிறகு அதில் முதலீடு செய்வதில் அர்த்தம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இது அனைத்து வாடிக்கையாளருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே ஒரு நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருவதாக கூறும் நிலையில், இந்நிறுவனங்கள் மூடப்பட்டால் ஒரு நிறுவனத்தின் ஆதிக்கம் முழுமையாக இருக்கும் என்பதால் மத்திய அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP