வைரலாக பரவும் சபரிமலை வீடியோ..! செல்போனில் படம் எடுப்பதற்கு தடை..

சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் சபரிமலை வீடியோ.. செல்போனில் படம் எடுப்பதற்கு தடை..
 | 

வைரலாக பரவும் சபரிமலை வீடியோ..! செல்போனில் படம் எடுப்பதற்கு தடை..

சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் சபரிமலை வீடியோ.. செல்போனில் படம் எடுப்பதற்கு தடை..

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இதனிடையே, சபரிமலை Iய்யப்பன் கோவில் கருவறை உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் மூலம் எடுக்கப்பட்ட படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், இதனால் 18-ம் படிக்கு மேல் பகுதிகளில் செல்போனில் படம் எடுப்பதற்கு முற்றிலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.  

இந்நிலையில், சன்னிதான பகுதியில் செல்போன் மூலம் படம் எடுக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போன் மூலம் சன்னிதான பகுதியில் படம் எடுக்க அனுமதி கிடையாது என எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய டிஜிட்டல் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP