கன்னியாகுமரியில் மோதல்: பாஜகவினர் படுகாயம்

கன்னியாகுமாரி மாவட்டம் வீரவநல்லூரில் இன்று வாக்குச்சாவடி அருகே பாஜக, அமமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் பாஜகவை சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 | 

கன்னியாகுமரியில் மோதல்: பாஜகவினர் படுகாயம்

கன்னியாகுமாரி மாவட்டம் வீரவநல்லூரில் இன்று வாக்குச்சாவடி அருகே பாஜக, அமமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் பாஜகவை சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கம்பியால் தாக்கிக் கொண்டதில் பாஜகவைச் சேர்ந்த சதீஷ், பழனியப்பன், மணிகண்டன், பரமேஸ்வரன், சரவணன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை, அமமுகவை சேர்ந்த பால்மணி தலைமையிலான 15 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP