தேனியில் துணை முதல்வர் ஓபிஎஸ் குடும்பத்தினருடன் வாக்களித்தனர்!

தேனி மக்களவைத் தொகுதி தேர்தல் மற்றும் பெரியகுளம் சட்டசபை இடைத்தேர்தலில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் வாக்களித்தனர்.
 | 

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் காலை முதலே வாக்களித்தனர். 

அதன்படி, தேனி மக்களவைத் தொகுதி தேர்தல் மற்றும் பெரியகுளம் சட்டசபை இடைத்தேர்தலில் வாக்களிக்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத்தும் வருகை தந்தனர். பின்னர் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தனர். 

முன்னதாக, இன்று பெரியகுளத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக 40 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமானது. அதன்பிறகு பழுது நீக்கப்பட்டு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP