சட்டப்பிரிவு 370 யை நீக்க கல்லூரிக் காலத்திலே போராடியவர் வெங்கையா நாயுடு: அமித் ஷா பேச்சு

வெங்கையா நாயுடு அவர்கள் கல்லூரி பருவத்தில் இருக்கும்போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 -யைநீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் நீங்கள் காஷ்மீருக்கு சென்றிருக்கிறீர்களா? உங்களுக்கு அதைப் பற்றி என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பினார்.
 | 

சட்டப்பிரிவு 370 யை நீக்க கல்லூரிக் காலத்திலே போராடியவர் வெங்கையா நாயுடு: அமித் ஷா பேச்சு

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய 'லிசனிங், லேர்னிங், லீடிங்' என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த், அரசியல் பிரமுகர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். 

புத்தகத்தை வெளியிட்டு விழாவில் பேசிய அமைச்சர் அமித் ஷா, "வெங்கையா நாயுடு அவர்கள் கல்லூரி பருவத்தில் இருக்கும்போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 -யைநீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் நீங்கள் காஷ்மீருக்கு சென்றிருக்கிறீர்களா? உங்களுக்கு அதைப் பற்றி என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வெங்கையா  நாயுடு சற்றும் யோசிக்காமல், 'ஒரு கண்ணில் இருந்து  மற்றொரு கண்ணை பார்க்க முடியாது. ஆனால், ஒரு கண் வலித்தால் மற்றொரு கண் அந்த வலியை உணர முடியும். அது போன்று தான் இதுவும்..' என்று பதில் அளித்தார். 

சட்டப்பிரிவு 370 யை நீக்க கல்லூரிக் காலத்திலே போராடியவர் வெங்கையா நாயுடு: அமித் ஷா பேச்சு

பல கட்ட போராட்டங்களை கடந்து அவர் இந்நிலைக்கு வந்துள்ளார். சட்டம் 370யை மீட்கப் போராடிய ஒருவர், தற்போது அந்த சட்டத்தை நீக்குவதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் போது அவைத் தலைவராக இருப்பது மிகச்சிறப்பு. அவசர நிலையின் போது ஜனநாயகத்தை மீட்க போராடியவர். 

சட்டப்பிரிவு 370யை நீக்குவதில் உறுதியாக இருந்தேன். முதலில் மாநிலங்களவைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தோம். வெங்கையா நாயுடு அவர்கள் அவைத்தலைவராக இருந்ததால் தான். ஒரு சீரிய தலைவராக இருந்து இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பையும் பெற்றார். 

ஒரு கட்சியின் செயல்வீரர் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து அதன்படி செயல்பட்டவர். அகில இந்திய தலைவராக இருந்தபோது ஒரு(டெல்லி) மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதைக் கூட மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.

தகவல் தொழில்நுட்பத் துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை, விவசாயத்துறை அமைச்சராகபதவி வகித்துள்ளார். அவரது காலத்தில் தான் சின் சிட்டி திட்டம் கொண்டுவரப்படும் தற்போது பல்வேறு நகரங்கள் வளர்ச்சியடைந்துள்ளன அவர் அகில இந்திய தலைவராக இருந்தபோது கட்சி பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை இருந்தபோதிலும் கட்சியின் அடிமட்டத் தொண்டன் இருந்து அனைத்து மாவட்ட தலைவர்களுடன் பேசி கட்சியை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார். அவரது பணி மேன்மேலும் தொடர வேண்டும்" என்று பேசினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP