வேலூர் 3 ஆக பிரிப்பு: மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் என 3 மாவட்டங்களாக வேலூர் பிரிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
 | 

வேலூர் 3 ஆக பிரிப்பு: மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் என 3 மாவட்டங்களாக வேலூர் பிரிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பேசிய முதலமைச்சர்,  திருப்பத்தூர், ராணிப்பேட்டை தலைமையிடங்களாக கொண்டு வேலூர் மாவட்டம்3 ஆக பிரிக்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு ஆகியவை புதிய மாவட்டங்களாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 2 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளதால், தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP