வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பு!

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 | 

வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பு!

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், வேலூர் தவிர இதர 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகளும் வெளியானது. 

வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்ததால், அங்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கான மறுதேர்தல் வருகிற ஆகஸ்ட்5ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதையடுத்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்புகளை கட்சிகள் வெளியிட்டு வரும் சூழலில், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தே மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  

அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP