வேலூர் தேர்தல்: அதிமுகவை பின்னுக்குத் தள்ளி திமுக முன்னிலை!

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
 | 

வேலூர் தேர்தல்: அதிமுகவை பின்னுக்குத் தள்ளி திமுக முன்னிலை!

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார். 

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். 

இந்நிலையில், இன்று காலை 11.40 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளரை விட சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

வேலூர்- மறுதேர்தல்

முன்னதாக, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், வேலூர் தவிர இதர 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகளும் வெளியானது. 

பணப்பட்டுவாடா நடைபெற்றதன் காரணமாக, வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, வேலூர் தொகுதிக்கான மறுதேர்தல் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்று வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP