வேலூர் - சென்னை குடிநீர் ரயில் இன்றுடன் நிறுத்தம்!

வேலூர் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்வது இன்றுடன் நிறுத்தப்படுகிறது.
 | 

வேலூர் - சென்னை குடிநீர் ரயில் இன்றுடன் நிறுத்தம்!

வேலூர் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்வது இன்றுடன் நிறுத்தப்படுகிறது. 

சென்னையில் கடந்த மூன்று மாதங்களுக்கு நிலவிய குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. தற்போது, சென்னையில் பெய்த மழை காரணமாகவும், ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நநிநீர் திறந்துவிட்டதாலும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது. இதையடுத்து இன்றுடன் சென்னைக்கு  தண்ணீர் கொண்டு செல்லப்படும் ரயில் சேவை நிறுத்தப்படுகிறது. இன்று காலை வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்ற 159வது ரயில் சேவையுடன் 39 கோடியே 25 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP