வேலூர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி!

வேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
 | 

வேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 11ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 18ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையொட்டி, அதிமுக கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடவுள்ளதாக அதிமுக கட்சி அறிவித்துள்ளது. அதேபோல், திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடவுள்ளார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP