4வது நாளாக நீடிக்கும் லாரிகள் ஸ்டிரைக் : காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

தொடர்ந்து 4வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால், தக்காளி, உருளை கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
 | 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கவும், சுங்கச்சாவடிகளை நாடு முழுவதிலும் இருந்து நீக்கி விட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்துவது,  மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ்,  நாடு முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, கோழிப்பண்ணையாளர்கள் சங்கங்கள் மற்றும் சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் என பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து 4வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு  உள்ளதால்,தக்காளி, உருளை கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP