வாஜ்பாயின் அஸ்தியை கரைக்கும் பாக்கியம் கிடைத்தது- தமிழிசை நெகிழ்ச்சி!

“மிக சிறந்த ஆட்சியை நடத்தியவர், இதை நாங்கள் பெருமையாக நினைகிறோம்.அவரது அஸ்தியை கடலில் கரைக்க பாக்கியம் செய்து இருக்க வேண்டும். தமிழகத்தில் 6 தலைவர்கள், 6 இடங்களில் வாஜ்பாயின் அஸ்தியை கரைக்க இருக்கிறார்கள்.
 | 

வாஜ்பாயின் அஸ்தியை கரைக்கும் பாக்கியம் கிடைத்தது- தமிழிசை நெகிழ்ச்சி!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை கடலில் கரைக்க பாக்கியம் செய்து இருக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 16 ஆம் தேதி காலமானார். டெல்லியில் அவரது உடலுக்கு பிரதமர், குடியரசு தலைவர், துணை தலைவர்  உட்பட்ட அனைத்து தலைவர்களும் மரியாதை செல்லுத்தினர்கள். பின்னர் அவரது உடல் டெல்லியில் உள்ள ராஷ்டிரிய ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது..முதலில் அரவது 
அஸ்தி டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் கரைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் சென்னை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் கரைக்கப்பட உள்ளனர். இன்று அவரது அஸ்தி டெல்லியில் இருந்து பாரதீய ஜனதா கட்சியின் மாநில தமிழிசை சவுந்திராராஜன் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது அஸ்தியை சென்னை விமான நிலையத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தி.நகரில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதன்பின் சென்னை, ராமேஸ்வரம் உள்ளிட்ட 6 இடங்களில் கரைக்கப்பட்ட இருக்கிறார்கள்.

இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை,  “மிக சிறந்த ஆட்சியை நடத்தியவர், இதை நாங்கள் பெருமையாக நினைகிறோம்.அவரது அஸ்தியை கடலில் கரைக்க பாக்கியம் செய்து இருக்க வேண்டும். தமிழகத்தில் 6 தலைவர்கள், 6 இடங்களில் வாஜ்பாயின் அஸ்தியை கரைக்க இருக்கிறார்கள். அவரது அஸ்தியை நாளை மாலை வரை பாரதீய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் வைக்கப்பட இருக்கிறோம். வாஜ்பாயின் அஸ்தியை வரும் 26ம் தேதி பௌர்ணமி அன்று கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP