தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு ஜாமீன்!

தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
 | 

தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு ஜாமீன்!

தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 

2009ஆம் ஆண்டு புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் இந்திய இறையாண்மைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாக தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வைகோ குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் ஓராண்டு சிறைதண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. 

இதையடுத்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜாமீன் கேட்டு உடனடியாக மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் வைகோவுக்கு ஜாமீன் வழங்கியது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP