யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி வெளியானது. இதில், தமிழகம் ஒட்டுமொத்தமாக 259 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களாக இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இதில், இறுதியாக நடைபெறும் நேர்காணல் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார் விழுப்புரத்தை சேர்ந்த சித்ரா.
 | 

யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி வெளியானது. இதில், தமிழகத்திலிருந்து ஒட்டுமொத்தமாக 259 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களாக இந்தத் தேர்வு நடைபெறுவது வழக்கம். இதில், இறுதியாக நடைபெறும் நேர்காணல் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார் விழுப்புரத்தை சேர்ந்த சித்ரா. 

இவர் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவரது தந்தை ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சித்ரா, தனியார் ஐடி கம்பெனியில் வேலை செய்துகொண்டே ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். முதல் இரண்டு முறை பிரிலிம்ஸ் எனப்படும் முதல்நிலை தேர்வில் தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து மூன்று முறை எழுத்துத் தேர்வில் வெற்றியடைந்திருந்தாலும் நேர்காணல் தேர்வில் தோல்வியை தழுவியுள்ளார். 

இதையடுத்து, விடாமுயற்சியுடன் படித்து வந்க அவர், தற்போது ஆறாவது முறையாக தேர்வில் வெற்றி பெற்று 296ஆவது ரேங்க்கை கைப்பற்றியுள்ளார். பொதுப்பிரிவினர் 6 முறை மட்டுமே எழுத முடியும் என்பதால், இதுதான் கடைசி வாய்ப்பு என்பதால் விடாமுயற்சியுடன் படித்து வெற்றி கண்டுள்ளார் சித்ரா. இவர் நேர்காணலில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 275 மதிப்பெண்களுக்கு 206 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்றால் இவர் தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர். 

இதுகுறித்து அவர் கூறுகையில், "நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த என்னை ஒரு அதிகாரியாக உருவாக்கியதற்கு எனது பெற்றோர்கள், நண்பர்கள் தான் காரணம்.  எனது பெற்றோர்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினாலும், வீட்டின் நிலைமை கருதி நான் வேலை பார்த்துக் கொண்டே படித்து வந்தேன்.

தேர்வு வரும் சமயத்தில் மட்டும், வேலையை ராஜினாமா செய்துவிட்டு படிக்கத் தொடங்குவேன். இப்படித்தான் ஒவ்வொரு முறையும் நிகழந்தது. எப்படியும் தேர்வில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முயற்சியில் படித்து வந்தேன். ஒவ்வொரு முறையும் பாஸ் ஆகவில்லை என்று தெரிந்த மறுநாளே அடுத்த ஆண்டு தேர்வுக்காக படிக்கத் தொடங்கி விடுவேன். இறுதியில் என் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் என்னுடைய கனவு இன்று நிறைவேறி உள்ளது" என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP