சென்னையில் முன்னறிவிப்பின்றி திடீர் 'பஸ் ஸ்டிரைக்'; மக்கள் அவதி!

சென்னையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் சென்னையில் பெரும்பாலான அரசு பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
 | 

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஜூன் மாதத்திற்கான ஊதியம் நேற்று வங்கி கணக்கில் வரவில்லை. மேலும், இந்த மாதம் ஊதியக்குறைப்பு நடவடிக்கை எடுக்கப் போவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில், சென்னையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்று திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் பெரும்பாலான பணிமனைகளில் இருந்து அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. 

இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அதுவும் எந்தவித முன்னறிவிப்பின்றி போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

முக்கியமாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பேருந்து இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர். ஷேர் ஆட்டோக்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆட்டோக்களின் வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற ஒரு புகாரும் எழுந்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP