திமுக இளைஞரணியில் 30 லட்சம் பேரை சேர்க்க திட்டம்: உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்துள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

திமுக இளைஞரணியில் 30 லட்சம் பேரை சேர்க்க திட்டம்: உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்துள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் உள்ள திருவாசல் குளம் தூர் வாரும் பணி திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்றது. இந்த பணியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி தொடங்கிவைத்தார். இதில், எம்.எல்ஏ பூண்டி கலைவாணன், ஆடலரசன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணியால் முடிந்த அளவுக்கு  தமிழகத்தில் உள்ள குளங்கள் தூர்வாரப்படும் என்றும்,  திமுக இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP