திருப்பத்தூர் 35வது மாவட்டமாக உதயம்

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிய மாவட்டமாக உதயமான திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
 | 

திருப்பத்தூர் 35வது மாவட்டமாக உதயம்

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிய மாவட்டமாக உதயமான திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

திருப்பத்தூர் தனியார் பள்ளியில் புதிய மாவட்ட பணிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாக பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வேலூரில் இருந்து பிரிந்து புதிய மாவட்டமாக உருவாகியுள்ள திருப்பத்தூர் 1797.92 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 11,11,812 மக்கள் தொகை கொண்டது. 

புதிய மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் என இரு வாருவாய் கோட்டமும், திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம், ஆம்பூர் ஆகிய தாலுக்காக்களும் இடம் பெற்றுள்ளன. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP