இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக ஆலோசனைக் கூட்டம்!

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 | 

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி ஆலோசனை கூட்டம் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக தலைவர்கள் அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இரு மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்த நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP