கலைப்பொருட்கள் கண்காட்சியினை பார்வையிட்ட இருநாட்டு தலைவர்கள்!

சென்னைக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கலைப்பொருட்கள் மற்றும் கைத்தறி கண்காட்சியினை பார்வையிட்டனர்.
 | 

கலைப்பொருட்கள் கண்காட்சியினை பார்வையிட்ட இருநாட்டு தலைவர்கள்!

சென்னைக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கலைப்பொருட்கள் மற்றும் கைத்தறி கண்காட்சியினை பார்வையிட்டனர். 

தமிழகத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஜின்பிங், இன்று 2வது நாளாக கோவளம் தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ஹோட்டலில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின் பிங் தலைமையில் உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. 

பின்னர் தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ஹோட்டலில் அமைக்கப்பட்டிருந்த தமிழக கலைப்பொருட்கள் மற்றும் கைத்தறி கண்காட்சியினை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இதில், காட்சிக்கு வைக்கப்பட்ட கோவை சிறுமுகையில் சீன அதிபர் ஷி ஜின்பிங் படத்துடன் தயாரான சால்வையையும், பிரதமர் மோடியின் உருவம் பொறித்த பீங்கான் தட்டையும் பார்வயிட்டனர். மேலும், காஞ்சிபுரம் பட்டு தயாரிக்கும் முறை, சிற்ப கலைகளை பார்வையிட்டனர். 

இதையடுத்து, கோவளம் ஹோட்டலில் இருந்து பிரத்யேக காரில் சென்னைக்கு புறப்பட்ட சீன அதிபர் ஷி ஜின் பிங்கை பிரதமர் நரேந்திர மோடி ஹோட்டல் வாசல் வரை வந்து கைகுலுக்கி வழியனுப்பி வைத்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP