தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவஞ்சலி கூட்டத்திற்கு மதுரைக்கிளை அனுமதி!

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வருகிற மே 22ஆம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, நிபந்தனைகளுடன் இன்று அனுமதி அளித்துள்ளது.
 | 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவஞ்சலி கூட்டத்திற்கு மதுரைக்கிளை அனுமதி!

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வருகிற மே 22ஆம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனைகளுடன் இன்று அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், கலவரம் ஏற்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் வன்முறையாளர்கள் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். மேலும் ஆங்காங்கே போலீசாரின் வாகனங்கள் மீதும், போலீசாரின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதையடுத்து கலவரக்காரர்களைக் கலைக்க, அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு  நடத்தினர். இதில்  13 பேர் உயிரிழந்தனர். இவர்கள் மறைந்து, ஓராண்டு ஆகும் நிலையில், வருகிற மே 22ம் தேதி அவர்களுக்கு தூத்துக்குடியில் நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா பாபு என்பவர் காவல்துறையில் மனு அளித்தார்.ஆனால், மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால், கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என்று காவல்துறையினர் மறுப்பு தெரிவித்து விட்டனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவஞ்சலி கூட்டத்திற்கு மதுரைக்கிளை அனுமதி!

இதைத் தொடர்ந்து அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், பல்வேறு நிபந்தனைகளுடன் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, பாத்திமா பாபுவுக்கு அனுமதி அளித்துள்ளது. 

அதாவது தூத்துக்குடியில் பெல் ஹோட்டலில் வருகிற 22-ஆம் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தை காலை 9 மணி முதல் 11 மணிக்குள்ளாக நடத்த வேண்டும். அதிகபட்சம் 250 பேர் இதில் கலந்துகொள்ளலாம். நினைவஞ்சலி கூட்டத்தினை, மனுதாரர் மற்றும் போலீசார் ஆகிய இரு தரப்பிலிருந்தும் முழுவதுமாக வீடியோ எடுத்து சமர்ப்பிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகளை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP