பாஜக தவறான ஆட்சி செய்தால் அதை துக்ளக் விமர்சிக்கும்: ஆடிட்டர் குருமூர்த்தி

பாஜக தவறான ஆட்சி செய்தால் அதை துக்ளக் நிச்சயம் விமர்சனம் செய்யும் என துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
 | 

பாஜக தவறான ஆட்சி செய்தால் அதை துக்ளக் விமர்சிக்கும்: ஆடிட்டர் குருமூர்த்தி

பாஜக தவறான ஆட்சி செய்தால் அதை துக்ளக் நிச்சயம் விமர்சனம் செய்யும் என துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். 

திருச்சியில் நடைபெற்ற துக்ளக் பொன்விழா சிறப்பு கூட்டத்தில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, "மகாராஷ்டிராவில் நிலையற்ற தன்மைக்கு காரணம் சரத்பவார். அங்கு நடப்பது அரசியல் நாடகம், பாஜகவும் அங்கு தர்மசங்கடத்தில் இருக்கிறது. பாஜக தவறான ஆட்சி செய்தால் அதை துக்ளக் நிச்சயம் விமர்சனம் செய்யும், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைக்க முயன்றால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

சசிகலாவை எதிர்க்க ஆரம்பித்தது முதல் துக்ளக் சர்க்குலேஷன் அதிகரித்துள்ளது. பத்திரிக்கை உலகம் சசிகலா காலில் போய் விழுந்தது. சசிகலா முதல்வர் ஆவதற்கான பணிகள் நடைபெற்று வந்த பொழுது ஓபிஎஸ் என்னிடம் வந்தார். இப்படி எல்லாம் நடக்கிறது என்று சொன்ன பொழுது அவரிடம் நான் கூறியதை அப்படியே கூற முடியாது. நீங்கள் எல்லாம்  ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க என்று கேட்டேன் நான் கூறியதால் தான் பன்னீர்செல்வம் சமாதியில் அமர்ந்து தியானம் செய்து அதன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைத்தேன்.

ஆளுநர் ஆட்சி அமைத்து 6 மாதத்தில் எந்த ஒரு மாற்றம் கொண்டு வர முடியாது, ரஜினி கொண்டுவந்தால் மட்டுமே மாற்றம் ஏற்படுத்த முடியும். திமுக குடும்பமாக கொள்ளை அடிப்பார்கள்.. குடும்ப ஆட்சியை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால்தான் காங்கிரசை எதிர்த்தோம். தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் பெரிய சக்தி திமுக தான். ரஜினி குடும்ப ஆட்சியை கொண்டுவர விரும்பாத நபர், எனவே ரஜினிகாந்தை விரைவில் அரசியலுக்கு வர அழைத்தால்தான் தமிழகத்திற்கு ஒரு மாறுதல் ஏற்படும் என பேசினார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP