Logo

உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முயற்சி செய்வது அதிமுகவா.. திமுகவா...? யார் சொல்வது உண்மை?

உள்ளாட்சி தேர்தலை அதிமுக தான் நிறுத்த முயற்சிப்பதாக திமுகவும், திமுக தான் முயற்சிப்பதாக அதிமுகவும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 | 

உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முயற்சி செய்வது அதிமுகவா.. திமுகவா...? யார் சொல்வது உண்மை?

உள்ளாட்சி தேர்தலை அதிமுக தான் நிறுத்த முயற்சிப்பதாக திமுகவும், திமுக தான் முயற்சிப்பதாக அதிமுகவும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் ஸ்டாலின், " உள்ளாட்சி தேர்தலுக்கு தடை செய்ய திமுக முயற்சிப்பது போன்று அதிமுக பிரச்சாரம் செய்வதாகவும், ஆனால், அதிமுக அரசுதான் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த சதி செய்வதாகவும் கூறினார். மேலும், வார்டு வரையறையை அதிமுக அரசு இதுவரை செய்யவில்லை என்றும் புதிய மாவட்டங்களுக்கான வார்டு மறுவரையறை பணிகளையும் அதிமுக அரசு முடிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் நேரடி தேர்தலை மறைமுக தேர்தலாக மாற்றியது என பல குளறுபடிகளை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். 

இந்நிலையில், ஸ்டாலின் பொய் கூறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தலை கண்டு திமுக அஞ்சுவதாக கூறிய அவர், தேர்தலை நிறுத்த திமுகதான் திட்டமிடுவதாகவும், உள்ளாட்சி தேர்தலை தள்ளிபோடவே திமுக உச்சநீதிமன்றம் சென்றுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

இதனிடையே, உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் அதிமுக, திமுக கண்ணாமூச்சி விளையாடுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.  ஆளும் கட்சியும், ஆள்வதற்கு ஆலாய் பறக்கும் கட்சியும் சுயநலத்துக்காக தேர்தல் நடக்காமல் பார்த்துக்கொள்கிறது என்றும், 3 ஆண்டாக புலிவருது புலிவருது என்பது போல தேர்தல் நடத்த போவதாக அறிவிப்பதும், உள்ளாட்சி தேர்தலில் குறை இருப்பதாக எதிர் கட்சி நீதிமன்றம் போவதுமாக கண்ணாமூச்சி நடக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது. 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP